தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பை வழங்க தயார் !

08.07.2022 10:15:46

பிரித்தானிய அரசாங்கத்துடன் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பை வழங்க ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

 

பெரும்பான்மை ஆதரவை இழந்ததால் பிரதமராக இருந்த பொரிஸ் ஜோன்சன், தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், ஜோ பைடன் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பிரித்தானியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகள். எங்களுக்கு இடையிலான சிறப்பான உறவு வலுவாக நீடித்தது.

உக்ரைன் மக்களுக்கான ஆதரவு, உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் தொடர்ந்து இணைந்து செயற்படும்’ என கூறினார்.