ETR.FM

கொவிட்-19 தொற்றினால் கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில், 4,083பேர் பாதிப்பு- 158பேர் உயிரிழப்பு

05.02.2021 08:45 1 நிமிட வாசிப்பு
கொவிட்-19 தொற்றினால் கனடாவில்  கடந்த 24 மணித்தியாலத்தில், 4,083பேர் பாதிப்பு- 158பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 4,083பேர் பாதிக்கப்பட்டதோடு 158பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்து 93ஆயிரத்து 734பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 20ஆயிரத்து 513பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 47ஆயிரத்து 714பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 760பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஏழு இலட்சத்து 25ஆயிரத்து 507பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்