அரச வருமான பற்றாக்குறை 6 ஆயிரத்து 441 கோடியால் உயர்வு

25.07.2021 11:12:38

2021 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரச வருமான பற்றாக்குறையானது 6 ஆயிரத்து 441 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நான்கு மாதங்களில் 34395.2 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறையானது 2021 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 40836.2 கோடி ரூபாய் என குறிப்பிடத்தக்களது அதிகரித்துள்ளது.

அரச வருமானமானது அரசின் அன்றாட செலவுகளைக் கூட ஈடு செய்ய முடியாத அளவுக்கு பற்றாக்குறையாக இருப்பதுடன் இந்த நிலைமையானது 2021 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மேலும் அதிகரித்துள்ளதால், அரச வருமான பற்றாக்குறை உயர்ந்துள்ளது.

இந்த காலப் பகுதியில் அரசின் மொத்த வருமானம் 48172.2 கோடி ரூபாயாக இருந்ததுடன் அரசின் அன்றாட செலவுகள் 890008.5 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரச வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 45217.5 கோடி ரூபாயாக காணப்பட்டதுடன் அது 2021 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 52054.3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

நிதியமைச்சு வெளியிட்டுள்ள 2021 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்ளுக்கான நிதி நிலை அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.