ETR.FM

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிர்வரும் 15 திகதி வரை விளக்கமறியலில்

03.02.2024 19:00 1 நிமிட வாசிப்பு
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிர்வரும் 15 திகதி வரை விளக்கமறியலில்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

நேற்று காலை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று காலை 9 மணியளவில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்படி, சுமார் 10 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்