ஜேர்மனியில் பயங்கரம் ! மர்மமான முறையில் ஒரே வீட்டில் 5 பேர் கொலை
ஜேர்மனியில் வீட்டில் தனிமைப்படுத்ததில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தலைநகர் பெர்லினுக்கு தெற்கே உள்ள Koenigs Wusterhausen நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் நடந்துள்ளது.
சனிக்கிழமையன்று, சந்தேகத்தின்பேரில் அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்ததன்படி, பொலிஸார் அந்த வீட்டுக்கு சோதனை செய்ய சென்றனர்.
அப்போது, வீட்டுக்கும் 3 குழந்தைகள் உட்பட மொத்த 5 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சடலங்களைக் கண்ட பொலிஸார், பலியான அனைவரும் துப்பாக்கியால் சுடபட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் தகவல்களின்படி, கொல்லப்பட்டவர்களில் இரண்டு பெரியவர்களும் 40 வயதுடையவர்கள் என்றும், குழந்தைகள் நான்கு, எட்டு மற்றும் பத்து வயதுடையவர்கள் என்றும் தெரியவந்தது.
இந்நிலையில், கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், ஆனால் சம்பவம் தொடர்பாக மேலதிக விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.