சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
28.02.2024 07:58:24
சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், கல்லீரல் செயலிழப்புக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.
இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் தலைமை வைத்திய அதிகாரி தேனிராஜன் தெரிவித்துள்ளார்.
சாந்தனை இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.