யாழ் நகரில் இரண்டு கடைகள் தீப்பற்றி எரிந்து நாசம்

28.12.2023 06:40:11

யாழ்ப்பாண நகரப் பகுதியில் இரண்டு கடைகள் தீப்பற்றி எரிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பெரிய கடை வீதியில் உள்ள இரண்டு கடைகளிலே நேற்று இரவு (27) குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


யாழ் மாநகர சபை
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தனர்.

 

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை  அண்மையில் மீசாலையில் கடை கட்டிடத் தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.