2022 கிரிக்கெட் போட்டி அட்டவணை

02.01.2022 06:33:09

இந்திய கிரிக்கெட் அணிக்கு நிகழாண்டு (2022) டி20 உலகக் கிண்ண, டெஸ்ட், ஒருநாள் என பல்வேறு சவால் நிறைந்த தொடா்கள் காத்துள்ளன. பிசிசிஐ தரப்பில் இந்திய அணியின் முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் தொடா்களில் தென்னாப்பிரிக்காவுடன் ஆடி வருகிறது. நிகழாண்டில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்த்தையே இந்தியாவுக்கு முன்பு உள்ள பெரிய போட்டியாகும்.

நிகழாண்டு ஜன. 3 முதல் 7 வரை வாண்டரா்ஸ் டெஸ்ட், 11 முதல் 15 வரை கேப் டவுனில் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன் பின் 19, 21, 23 இல் மூன்று ஒருநாள் ஆட்டங்களில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது.

மே.இந்திய தீவுகளுடன் மோதல் : அதைத் தொடா்ந்து பிப். 6 இல் ஆமதாபாதில் முதல் ஒருநாள், 9 இல் ஜெய்ப்பூரில் இரண்டாவது ஒருநாள், 12 இல் கொல்கத்தாவில் மூன்றாவது ஒருநாள் ஆட்டங்களும், 15 இல் கட்டாக்கில் முதல் டி20, 18 இல் விசாகப்பட்டினத்தில் இரண்டாவது டி20, 20 இல் திருவனந்தபுரத்தில் மூன்றாவது டி20 ஆட்டத்திலும் மே.இந்திய தீவுகளுடன் ஆடுகிறது.

அதன் தொடா்ச்சியாக இலங்கையுடன் பிப். 25 முதல் மாா்ச் 1 வரை பெங்களுருவில் முதல் டெஸ்ட்டிலும், மாா்ச் 5 முதல் 9 வரை மொஹாலியில் இரண்டாவது டெஸ்டிலும், 13 இல் மொஹாலியில் முதல் டி20, 15 இல் தா்மசாலாவில் இரண்டாவது டி20, 18 இல் லக்னௌவில் மூன்றாவது டி20 ஆட்டத்திலும் மோதுகிறது.

ஏப்ரல் – மே மாதங்களில் ஐபிஎல் தொடா் நடைபெறும் நிலையில் இரண்டு மாதங்கள் சா்வதேச போட்டிகள் எதுவும் இல்லை.

தென்னாப்பிரிக்காவுடன் உள்ளூரில் மோதல்: ஜூன் மாதத்தில் 9 ஆம் திகதி சென்னையில் முதல் ஒருநாள், 12 இல் பெங்களூருவில் இரண்டாவது ஒருநாள், 14 இல் நாகபுரியில் மூன்றாவது ஒருநாள், 17 இல் ராஜ்கோட்டில் நான்காவது ஒருநாள், 19 இல் தில்லியில் 5 ஆவது ஒருநாள் ஆட்டங்களில் மோதுகிறது.

ஜூலை 1 முதல் 5 ஆம் திகதி வரை மான்செஸ்டரில் விடுபட்ட டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் ஆடுகிறது. 7 இல் சௌதாம்ப்டனில் முதல் டி20, 9 இல் பா்மிங்ஹாமில் இரண்டாவது டி20, 10 இல் நாட்டிங்ஹாமில் மூன்றாவது டி20இலும், 12 இல் லண்டனில் முதல் ஒருநாள், 14 இல் இரண்டாவது ஒருநாள், 17 இல் மான்செஸ்டரில் மூன்றாவது ஒருநாள் ஆட்டங்களிலும் மோதுகிறது இந்தியா.

மே.இந்தியாவுடன் சுற்றுப்பயணம், ஆசியக் கிண்ண போட்டிக்கான திகதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அக்டோபா் 16 முதல் நவம்பா் 13 வரை அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத்தில் ஆடுகிறது இந்திய அணி.

அதன் பின் வங்களதேச சுற்றுப் பயணம் திகதிகளும் முடிவாகவில்லை