அமெரிக்கா, ஜப்பான் கண்டனம்

29.10.2022 15:36:14

கொரிய எல்லையில் தென்கொரிய மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் வரும் 31-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ம் தேதி வரை கொரிய எல்லையில் வான்வழி பயிற்சியில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வடகொரியா நேற்று குறுகிய தூரம் செல்லக்கூடிய 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள டோங்சோன் நகரில் இருந்து ஏவப்பட்ட 2 ஏவுகணைகளும் 24 கி.மீ உயரத்தில் 230 கி.மீ வரை பறந்து சென்று பின்னர் கடலில் விழுந்ததாக தென்கொரியா கூட்டுப்படைகளின் தலைவர் தெரிவித்தார். இந்நிலையில், வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.