உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

02.02.2022 05:42:32

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை எதிர்பாராதவிதமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் வரையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 81 தொடக்கம் 83 டொலர் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் ஆனால் தற்போது ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 91 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

உலகச் சந்தையில் இம்மாதத்தில் மசகு எண்ணெய் விலை குறைவடையலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், விலை உயர்ந்தே இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

விலை அதிகரிப்பு காரணமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நாடுகள் மேலும் சிக்கலுக்குள்ளாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.