'கிரீன் கார்டு' தாமதத்தை தவிர்க்க உத்தரவு

10.10.2021 12:48:53

அமெரிக்காவில் 'கிரீன் கார்டு' வழங்குவதில் தாமதத்தை தவிர்க்கும்படி, அதிகாரிகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் வெளிநாட்டினர் நிரந்தரமாக தங்குவதற்கு 'கிரீன் கார்டு' பெற வேண்டும்.

ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் மட்டுமே கிரீன் கார்டுகளை அமெரிக்க குடியேற்றத்துறை வழங்கி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் பலர் 'எச் ௧ பி' விசா பெற்று, பணியாற்றி வருகின்றனர்.