டைம்ஸின் ‘ஆண்டின் மனிதர்’ ஆக எலன் மஸ்க்!
14.12.2021 05:40:21
டைம்ஸ் இதழின் “ஆண்டின் மனிதர்” ஆக எலன் மஸ்க் பெயரிடப்பட்டுள்ளார்.
டைம்ஸ் இதழ் வருடாந்தம் உலகில் செல்வாக்குமிக்க மனிதர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இதில் இந்த ஆண்டின் மனிதராக ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் நிறுவனரும், உலகின் முதல் நிலை செல்வந்தருமான எலன் மஸ்க் பரிணமிக்கிறார்.