ETR.FM

புகையிரத சேவைகள் இன்று முதல் வழமைக்கு

29.11.2021 06:34 1 நிமிட வாசிப்பு
புகையிரத சேவைகள் இன்று முதல் வழமைக்கு

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இரத்து செய்யப்பட்ட பல புகையிரத சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் மலையக புகையிரத பாதையில் பொடி மெனிகே புகையிரதம் மாத்திரம் இன்று முதல் பதுளைக்கும் கொழும்புக்கும் இடை யில் சேவையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இன்று அதிகாலை 5.55 மணிக்கு பொடி மெனிகே புகையிரதம் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்துள்ளதுடன் மற்றுமொரு புகையிரதம் இன்று காலை 8.30 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்