இஸ்தான்புல் சிறையில் தீ :20 கைதிகள் மயங்கினர்
துருக்கியின் இஸ்தான்புல் சிறையில் நடந்த தீ விபத்தில் மயங்கிய 20 கைதிகள் மற்றும் சிறை காவலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியின் இஸ்தான்புல் சிறையில், நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றியது.சிறை பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால், தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
இதற்கிடையே தீயின் புகையால் மயங்கிய 20 கைதிகள் மற்றும் சிறை காவலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சிறையில் தீ அணைக்கப்பட்டதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் நலமுடன் இருப்பதாக, அந்நாட்டு சட்ட அமைச்சர் பெகிர் போஸ்டாக் சமூக வலைதளத்தில் தகவல் பகிர்ந்துள்ளார்.
துருக்கியில் அரசின் தடுப்புக் காவல் விதிகளுக்கு எதிராக, சிறையில் படுக்கை மற்றும் போர்வைகளை கைதிகள் எரித்த சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. தற்போது தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.