சியல்கொட் படுகொலை – இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதம்

20.12.2021 10:18:08

பிரதமர் இம்ரான் கானின் தீர்மானத்துக்கமைய பாகிஸ்தானின் சியல்கொட்டில் இலங்கை பிரஜையான பிரியந்த குமார தியவடன படுகொலை செய்யப்பட்ட விவகாரம் இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த விவாதம் , இன்றும் நாளை மறுதினமும்  இடம்பெறும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதேவேளை, பிரியந்த குமார தியவடன படுகொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 85 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.