ETR.FM

பிரித்தானியாவில் குடும்பங்களுக்கு தலா 100 பவுண்கள் நிதியுதவி.

18.11.2026 15:18 1 நிமிட வாசிப்பு
பிரித்தானியாவில் குடும்பங்களுக்கு தலா 100 பவுண்கள் நிதியுதவி.

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவும் வகையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 20 மில்லியன் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளுக்கு தலா 100 பவுண்டுகள் நேரடியாக வைப்புச் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பணவீக்க நிலவரம் தொடர்பாக இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே திறைசேரியின் தலைமைச் செயலாளர் எம்மா ரெனால்ட்ஸ் (Emma Reynolds), இதனைக் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்ய போர் ஆகியவை உலகளாவிய செலவினங்களை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எரிசக்திக் கட்டணங்களைக் குறைப்பதற்காக வீட்டு எரிசக்திக் கட்டணங்கள் மீதான சில வரிகளை நீக்குதல், நிலையான கட்டணங்களை ரத்து செய்தல் உள்ளிட்ட நீண்டகால நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் திறைசேரியின் தலைமைச் செயலாளர் எம்மா ரெனால்ட்ஸ் (Emma Reynolds) மேலும் கூறியுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்