மகன் சார்லஸ் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாட பிரிட்டன் ராணி முடிவு

24.12.2021 11:51:11

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை, மகன் சார்லஸ், மருமகள் கமிலாவுடன் கொண்டாடுகிறார்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்(98), எப்போதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை நார்போல்கில் உள்ள சண்டிகிரம் எஸ்டேட்டில் தான் கொண்டாடுவது வழக்கம். கொரோனா பரவலுடன் 'ஒமைக்ரான்' வைரஸ் பரவலும் சேர்ந்துள்ளதால், இந்த ஆண்டு எஸ்டேட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை எலிசபெத் ரத்து செய்துள்ளார்.