ETR.FM

டொனால்ட் ட்ரம்ப் சீனா சென்றடைந்தார்!

18.11.2026 15:15 1 நிமிட வாசிப்பு
டொனால்ட் ட்ரம்ப் சீனா சென்றடைந்தார்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பிலிப்பைன்ஸ் பயணத்தை நிறைவு செய்து, அங்கிருந்து சீனா புறப்பட்டு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் நடைபெற்ற ‘குவாட்’ உச்சிமாநாட்டில் ட்ரம்ப் கலந்து கொண்டார். 

சீனாவின் குவாங்டொங் மாகாணம் சென்சென் நகரில் நடைபெறும் APEC மாநாட்டில் கலந்துகொள்ள ட்ரம்ப் சீனா சென்றுள்ளார்.

ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு(APEC) அமைப்பின் 33வது மாநாடு, இன்று(18) மற்றும் நாளை(19) ஆகிய இரு திகதிகளில் நடைபெற உள்ளது. 

21 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த அமைப்பில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கின்றனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்