ETR.FM

பொத்துவில் தொகுதியின் ஏற்பாட்டாளர் சஜித்திற்கு ஆதரவு!

05.06.2024 08:56 1 நிமிட வாசிப்பு
பொத்துவில் தொகுதியின் ஏற்பாட்டாளர் சஜித்திற்கு ஆதரவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் ஏற்பாட்டாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் முன்னாள் பிரதான அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்துல் மஜீத் அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச அவர்களின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிப்பதாக தெவித்துள்ளார்

அதன்படி அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.

இன்னிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் இணை அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்