மேலும் ஊரடங்கை நீடிக்க ஜேர்மனிய அரசாங்கம் தீர்மானம்
03.03.2021
09:12
1 நிமிட வாசிப்பு
ஊரடங்கு உத்தரவினை மேலும் நீடிக்க ஜேர்மனிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியில் கொரோனா பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஊரடங்கை நீடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மாகாண ஆளுநர்களுடன் அஞ்சலா மெர்கல் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.