ETR.FM

பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் எத்தீர்மானமும் இல்லை!

21.09.2021 07:43 2 நிமிட வாசிப்பு
பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் எத்தீர்மானமும் இல்லை!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 200 ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவிலேயே தீர்மானிக்கப்படும் எனவும் ரா ஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் பால்மா விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதிக்குமாறு பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கடந்த ஒரு மா தகாலமாக கோரி வருகின்றன.

விலை அதிகரிக்க அனுமதிக்கப்படாதமையால் தற்போது இறக்குமதியை மட்டுப்படுத்தி இருக்கின்றமையினால் சந்தையில் கடந்த சில வாரங்களாக பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.

இந்த பின்னணியில் பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையா டல் ஒன்று இடம்பெ ற்றுள்ளது. இதன்போது உலக சந்தையில் பால்மா விலை அதிகரிக்கப்பட்டிருப்பது, கப்பல் கட்டணம் அதிகரித்திருப்பது, ரூபாவுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி அதிகரித்திருப்பது போன்ற காரணங்களுக்கமைய ஒரு கிலோ கிரா ம் பால்வின் விலையை 350 ரூபா வரை அதிகரிப்பதற்கு அனுமதி கோ ரியுள்ளனர்

சந்தை நிலைமை மற்றும் இறக்குமதி வரி தொடர்பில் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் ஒரு கிலோ பால்மா வின் விலையை 200 ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் கொள்கையளவில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்