யாழில் இருந்து புறப்பட பேருந்து விபத்து: ஸ்தலத்திலேயே பலியான 8 உயிர்கள்

26.12.2023 06:25:36

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் நாயாத்துவழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று (25) மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் அதி வேகமாக பயணித்த தனியார் பேருந்தே நாயாத்து வழி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த மாடுகளின் மீது மோதியுள்ளது.

8 மாடுகள் பலி 
குறித்த விபத்தில் கூட்டமாக சென்ற மாடுகளில் 8 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு பல மாடுகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாலம்பன் கிராமத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களின் மாடுகளே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளன.

குறித்த மாடுகள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் மாடுகளை அடைக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.