ETR.FM

ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ டேனியல் கப்பல் படை தளபதியாக நியமனம்

25.09.2021 12:16 1 நிமிட வாசிப்பு
ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ டேனியல் கப்பல் படை தளபதியாக நியமனம்

ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்து கப்பல் படை தளபதி என்ற கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வரிசையில் 25வது படமாக ‘நோ டைம் டு டை’ உருவாகி உள்ளது. இதில், டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட்டாக நடிக்க ஆரம்பித்த டேனியல் கிரேக், இதுவரை கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் ஆகிய 4 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்து இருக்கிறார். ‘நோ டைம் டு டை’ படம்தான் தனது கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டேனியல் கிரேக்கை கவுரவிக்கும் விதமாக, இங்கிலாந்து கப்பல் படைத்தளபதியாக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக டேனியல் கிரேக் கப்பல் படை சீருடை அணிந்துள்ள புகைப்படம் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கப்பல் படைத்தளபதி என்ற கவுரவமிக்க பதவி தனக்கு கிடைத்திருப்பது மிகவும் பெருமையளிப்பதாக டேனியல் கிரேக் கூறியுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்