அடையாளம் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் கண்டெடுப்பு!
28.12.2023 06:27:41
அடையாளம் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியூகுண விகாரைக்கு மேலே உள்ள ஏரிக்கு அருகிலும், திஸ்மல்பொல புகையிரத கடவைக்கு அருகில் உள்ள மா ஓயாவிலுமே குறித்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.