ETR.FM

கொரோனா மரணங்கள் சடுதியாக சரிந்தன

30.10.2021 07:17 1 நிமிட வாசிப்பு
கொரோனா மரணங்கள் சடுதியாக சரிந்தன

நாட்டில் நேற்றைய தினம் 10 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,706 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில், 3 பெண்களும் 7 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்