இம்ரான்கானுக்கு 'சம்மன்': பாகிஸ்தான் கோர்ட் எச்சரிக்கை

05.01.2022 12:12:18

'தனி முகாமில் அடைக்கப் பட்டுள்ளவரை நேரில் ஆஜர்படுத்தத் தவறினால் பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு 'சம்மன்' அனுப்பப்படும்' என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஆரிப் குல் என்பவர் ஆப்கன் எல்லையில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தனி முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு பாக். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.