தைவானுக்கு அழைப்பு: சீனா புறக்கணிப்பு

24.11.2021 13:12:00

ஜனநாயகம் தொடர்பாக ஆன்லைனில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க தைவானுக்கு அழைப்பு விடுத்துள்ள அமெரிக்கா, சீனாவை அழைக்கவில்லை.

அமெரிக்கா தலைமையில் ஜனநாயகம் மாநாட்டை அடுத்த மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜனநாயக நாடுகளுக்கான சவால்கள், வாய்ப்புகள் அதனை எதிர்கொள்ளுதல், ஊழலுக்கு எதிராகவும், மனித உரிமைகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

வீடியோ கான்பரன்சிங் முறையில், அதிபர் பைடன் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 110 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. தைவானை அழைத்துள்ள அமெரிக்கா, சீனாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தைவானுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.



அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.