ETR.FM

முடிவில் எந்தக் குழப்பமும் இல்லை!

10.09.2024 08:10 1 நிமிட வாசிப்பு
முடிவில் எந்தக் குழப்பமும் இல்லை!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பது என்ற இலங்கை தமிழரசுகட்சியின் நிலைப்பாடு குறித்து எந்தவித குழப்பமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்

   

சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

செப்டம்பர் முதலாம் திகதி வவுனியாவில் அறிவிக்கப்பட்டது போன்று இலங்கை தமிழரசுகட்சி 2024 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பது என்ற உத்தியோகபூர்வ முடிவை எடுத்துள்ளது.

எனது கட்சியின் அனைத்து உறுப்பினர்களினதும் நிலைப்பாடு இது இதுவே எனது நிலைப்பாடு, இந்த நிலைப்பாடு குறித்து எந்த குழப்பமும் இல்லை

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்