குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்

16.07.2024 07:47:11

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளராக டொனால்டிரம்ப்உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் மாநாட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

துணைஜனாதிபதி வேட்பாளராக செனெட்டர் ஜேடி வின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானபின்னர்முதல்தடவையாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொதுநிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

குடியரசுக்கட்சியின் மாநாட்டில் அவர் துணைஜனாதிபதி வேட்பாளர் செனெட்டர் ஜேடி வன்சுடன் மேடையில் தோன்றினார்.

மாநாட்டில் கலந்துகொண்டுள்ள குடியரசுகட்சியினர் அமெரிக்கா அமெரிக்கா எங்களுக்கு டிரம்ப் வேண்டும் என கோசமெழுப்பினர்.

துப்பாக்கி பிரயோகத்தினால் காதில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் வலதுகாதில் பான்டேஜூடன் டிரம்ப் காணப்படுகின்றார்.