தேசிய கட்டமைப்புடன் தனியார் மின்பிறப்பாக்கிகளை இணைக்க திட்டம்

26.01.2022 06:25:48

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான மின்பிறப்பாக்கிகளை தேசிய கட்டமைப்புடன் இணைப்பதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுமார் 2,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மின்பிறப்பாக்கிகள் குறித்த நிறுவனங்களிடம் உள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரிலுள்ள 10 இடங்களில் மாத்திரம் 60 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மின் உற்பத்தி இயந்திரங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் மின்சார நெருக்கடி, வழமைக்கு திரும்பும் வரை குறித்த மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.