ETR.FM

பிள்ளையான் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

10.11.2026 13:21 1 நிமிட வாசிப்பு
பிள்ளையான் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தன் உட்பட மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டது.

2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிள்ளையான் காணொளித் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

விசாரணையில் உள்ள சம்பவங்களில், கல்லடியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் உறுப்பினர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, மற்றும் 2008 ஆம் ஆண்டு வவுனதீவு – கரையக்கன்தீவு பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை ஆகியவை அடங்கும்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்