மர்மமான முறையில் பிரித்தானியக் குழந்தை மாயமான வழக்கு: ஜேர்மன் அதிகாரிகள் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்
பிரித்தானியக் குழந்தை ஒருத்தி போர்ச்சுகல்லில் மர்மமான முறையில் மாயமான வழக்கில் முக்கிய தடயம் கிடைத்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து வழக்கு பரபரப்படைந்துள்ளது.
Leicestershireஐச் சேர்ந்த Kate மற்றும் Gerry McCann தம்பதியர், 2007ஆம் ஆண்டு, மே மாதம் 3ஆம் திகதி, தங்கள் குழந்தைகளான Madeleine McCann, இரட்டையர்களான Sean மற்றும் Amelieயுடன் போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள்.
பிள்ளைகளை தாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் தூங்கவைத்துவிட்டு, அருகிலுள்ள ஹொட்டல் ஒன்றிற்கு சாப்பிடச் சென்றிருந்தார்கள் பெற்றோர். அவர்கள் திரும்பி வந்தபோது, கட்டிலில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த Madeleine மாயமாகியிருந்தாள்.
அவளை அருகில் உள்ள இடங்களில் தேடியும் கிடைக்காததால் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
நேற்றுடன், Madeleine காணாமல் போய் 15 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவள் என்ன ஆனாள் என்பது இதுவரையிலும் தெரியவேயில்லை...
அந்த நபர், ஏற்கனவே ஒரு பெண்மணி மற்றும் சிறுமியை வன்புணர்ந்தது, மற்றும் ஆபாசமாக நடந்துகொண்டது என சில வழக்குகளில் சிக்கி சிறையிலிருக்கிறார்.