ஒமைக்ரானை நினைத்து பீதி வேண்டாம்: விஞ்ஞானி சவுமியா

04.12.2021 06:59:59

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், “ஒமைக்ரான் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம். தடுப்பூசிகளை மாற்றியமைக்க வேண்டுமா என்பதை இவ்வளவு சீக்கிரத்தில் சொல்ல முடியாது” என்றார்.
 

 

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன மாநாடு ஒன்றில் கலந்துக்கொண்டு சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது: ஓமைக்ரான் தீவிரமான வகையாக மாறுமா என்று கணிக்க இயலாது. மிகவும் பரவக்கூடியதாக உள்ளது. தென் ஆப்ரிக்காவில் தினசரி பாதிப்பு இரட்டிப்பாகிறது.

நாம் தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் பீதி அடையாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் ஓரு வருடத்திற்கு முன்பு இருந்த சூழ்நிலையிலிருந்து நாம் மாறுபட்டு உள்ளோம். தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.