புற்று நோயாளிகளின் மனநிலையை குணப்படுத்தும் தங்குமிடம்!
இன்றைய சமூகத்தில் புற்றுநோயால் வாழ்வின் மீதான நம்பிக்கையை இழந்தவர்கள் ஏராளம்.
இவ்வாறானவர்களுக்காக அவர்களின் வாழ்நாளை மன நிம்மதியுடன் நீடிக்க அர்ப்பணிப்புடன் கூடிய அற்புதமான புற்றுநோய் சிகிச்சை நிலையம் மட்டக்களப்பில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இன்று அது பற்றிய தகவல் கிடைத்தது.
மட்டக்களப்பு, ஏறவூர் பகுதியில் அமைந்துள்ள இந்த புற்றுநோய் சிகிச்சை நிலையம் இலங்கையில் உள்ள எந்தவொரு புற்றுநோயாளிக்கும் திறந்திருக்கும்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மொஹமட் இக்பாலின் எண்ணக்கருவுக்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட இம்மையமானது பிரதேச செல்வந்தர்கள் சிலரால் நடத்தப்பட்டு வருகின்றது.
புற்று நோய் சிகிச்சைக்காக வீட்டை விட்டு வெகுதூரம் செல்ல முடியாத, பயணச் செலவுகளை தாங்க முடியாமல், மருத்துவமனையிலிருந்து வெகு தொலைவில் உள்ள இடத்தில் தங்குவதற்கு பணம் செலுத்த முடியாத எந்த நோயாளியும் இங்கு தங்கலாம்.
கையில் பணம் இருந்தாலும், நோய் காரணமாக வீட்டிலேயே இருக்கும் மனநிலையில் இல்லாதவர்கள் அல்லது நோயாளியைக் கவனிப்பதில் குடும்ப உறுப்பினர்களுக்கு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பவர்களும் இந்த மையத்திற்கு பிரவேசிக்கலாம்.
இங்கு தங்கியுள்ள நோயாளிகளுக்கு உணவு, பானங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையத்திலிருந்து நோயாளர்களை நோயாளர் காவு வண்டிகள் மூலம் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
நோயாளிகளின் மன நிலையை நன்றாக வைத்திருப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
அதனால்தான் இந்த மையத்தின் சுற்றுச்சூழலும் கூட நோயாளிகளுக்கு இதமாக இருக்கும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
"புற்றுநோயாளி" என்ற உணர்வு இந்த நோயாளிகளால் அரிதாகவே உணரப்படுகிறது.
ஊழியர்கள் அதற்காக அர்ப்பணித்துள்ளனர்.
இவை அனைத்தும் இலவசமாக செய்யப்படுவதுதான் சிறப்பாகும்.
இந்த நோயாளிகள் எவரிடமும் எந்த விதத்திலும் பணம் வசூலிக்கப்படுவதில்லை.
இந்த மையத்தில் ஒரே நேரத்தில் தங்கக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை 30 ஆகும்.