ETR.FM

சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

14.10.2021 04:31 1 நிமிட வாசிப்பு
சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியம் சுவாமிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில்நேற்று முற்பகல் இடம்பெற்றது.


பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்திருக்கும் சுப்ரமணியன் சுவாமி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவுக்காக முன்னிலை வகித்திருப்பதோடு, இலங்கையில் நிலவிய பயங்கரவாத நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கான இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியவராவார்.


பொருளாதார நிபுணரும் புள்ளியியல் வல்லுநருமான சுப்ரமணியன் சுவாமி, பாதுகாப்புச் செயலாளராக ஜனாதிபதி பதவி வகித்த காலப்பகுதியில் நடத்தப்பட்ட மாநாடுகளின் போது, விரிவுரையாளராகவும் கலந்துகொண்டிருந்தார்.


சுப்ரமணியன் சுவாமி இம்முறை இலங்கை விஜயத்தின் போதும் சந்திக்கக்கிடைத்தமையிட்டு, ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்