ETR.FM

சினோபார்ம் தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்கும் திட்டம் இன்றிலிருந்தே ஆரம்பம் !

08.05.2021 10:07 1 நிமிட வாசிப்பு
சினோபார்ம் தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்கும் திட்டம் இன்றிலிருந்தே ஆரம்பம் !

சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் (Sinopharm) கொரோனா தடுப்பூசித் திட்டம் இலங்கையில் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதன்படி, பானந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிமுதல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சீனா அரசாங்கத்தால் ஆறு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு இலவசமாக நட்பு ரீதியாக வழங்கப்பட்டது. அதில் ஒரு பகுதி நாட்டில் வசிக்கும் சீனர்களுக்குச் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு நேற்று அங்கீகாரம் வழங்கிய நிலையில், இலங்கையில் குறித்த தடுப்பூசித் திட்டம் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது.

இதேவேளை, அடுத்தவாரமளவில் தடுப்பூசித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்