ETR.FM

ஐ.நாவின் 52 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் ஜெனிவாவில் ஆரம்பம்

26.02.2023 00:05 1 நிமிட வாசிப்பு
ஐ.நாவின் 52 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் ஜெனிவாவில் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஐ.நா மனித உரிமைகள் குழுக் கூட்டமும் அன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

 சிறிலங்கா விவகாரங்கள்

மார்ச் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தின் போது சிறிலங்கா விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

மார்ச் மாதம் 8 ஆம் திகதியும் 9 ஆம் திகதியும் இலங்கை தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை

இம்முறை ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை எனவும் சிறிலங்கா சார்பில் அதிகாரிகள் குழுவொன்று ஜெனிவா செல்லவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் சட்ட மா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு, அதிபர் செயலகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா சார்பில் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தொடர்பிலான பிரேணைகள் இம்முறை கொண்டுவரப்பட மாட்டாது எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். 

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்