ETR.FM

மருத்துவர்களின் கட்டாய ஓய்வு!

16.12.2022 00:02 1 நிமிட வாசிப்பு
மருத்துவர்களின் கட்டாய ஓய்வு!

மருத்துவர்களின் கட்டாய ஓய்வு வயதை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, விஷேட மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள், பல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் அரசுப் பதிவு மருத்துவர்கள் ஆகிய பதவிகளின் கட்டாய ஓய்வு வயது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் முறை அறிவிப்பு

சட்டத்திருத்தத்தின்படி ஏற்கனவே 63 வயதை பூர்த்தி செய்த மருத்துவர்கள் டிசம்பர் 31ம் திகதிக்கு முன் ஓய்வு பெற வேண்டும். 62 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 63 வயது நிறைவடைந்ததும் ஓய்வு பெற வேண்டும் எனவும், 61 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 62 வயது பூர்த்தியடைந்ததும் ஓய்வு பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 60 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 61 வயது நிறைவடைந்தவுடன் ஓய்வு பெற வேண்டும் என்றும், 59 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 60 வயது நிறைவடைந்தவுடன் ஓய்வு பெற வேண்டும் என்றும் புதிய திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்