ETR.FM

ஏப்ரல் 21 தாக்குதல்; நால்வருக்கும் மீண்டும் விளக்கமறியல்

19.08.2021 06:14 1 நிமிட வாசிப்பு
ஏப்ரல் 21 தாக்குதல்; நால்வருக்கும் மீண்டும் விளக்கமறியல்

ஏப்ரல்-21 பயங்கரவாத தாக்குதலில் கொழும்பு – கிங்ஸ்பெரி விருந்தகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய மொஹமட் முபாரக்கின் மனைவி உள்ளிட்ட 4 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கின் விசாரணைகள் கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்றன.

இதன்போது, அவர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்