வெளிப்படையாக காரணத்தை கூறிய ஜேர்மன் சான்சலர்

03.05.2022 11:13:06

 கடந்த மாதம் ஜேர்மன் ஜனாதிபதி Frank-Walter Steinmeier-ஐ வரவேற்க உக்ரைன் மறுத்தால், தான் அந்நாட்டிற்கு செல்லமாட்டேன் என ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் போலந்து தலைநகர் வார்சாவில் பேசிய ஜேர்மன் ஜனாதிபதி Frank-Walter Steinmeier, உக்ரைனில் என்னை வரவேற்க மாட்டார்கள், எனெனில் ரஷ்யாவுடன் நான் நீண்ட காலம் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக ஜெலன்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசாங்கம் குற்றம்சாட்டுவதாக கூறினார்.

இந்நிலையில் திங்கட்கிழமை நேர்காணல் ஒன்றில் பேசிய ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், ராணுவ உதவி, நிதியுதவி, எதிர்காலத்தில் உக்ரைனுக்கு முக்கியமான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் ஒரு நாட்டுடைய ஜனாதிபதியை இவ்வாறு நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜேர்மனியின் ஜனாதிபதியை வரவேற்காதது, நான் எனது கீவ் பயணத்தை நிறுத்தி வைத்துள்ளதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என ஓலாஃப் தெரிவித்துள்ளார்.

எனினும், நாங்கள் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு அளிப்போம் என ஓலாஃப் உறுதியளித்துள்ளார்.