உணவு விநியோக பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை வேண்டும் – கிம்

03.09.2021 14:16:00

உணவு விநியோக பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன், அந்த நாட்டு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், காலநிலை மாற்றத்தின் பாதகத்தன்மை குறித்தும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சியின் அரசியல் உயர்மட்ட கூட்டத்தில் ஆற்றிய உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு சூறாவளி காரணமாக, முக்கியமான பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், சில வாரங்கள் நீடித்த வறட்சியைத் தொடர்ந்து, நிலவிய மழையுடனான காலநிலையாலும் தொடர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், அசாதாரண காலநிலையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் அவசியமாகும் என்று வடகொரிய தலைவர், அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.