ETR.FM

நீரில் மூழ்கி சுமார் 800 பேர் இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பதாக ஐ.நா அறிக்கை !

25.07.2021 11:19 1 நிமிட வாசிப்பு
நீரில் மூழ்கி சுமார் 800 பேர்  இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பதாக ஐ.நா அறிக்கை !

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 75 ஆவது கூட்டத் தொடரில் உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தொடர்பான முதலவாது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜூலை 25 உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

உலகில் நீரில் மூழ்குவதால் வருடமொன்றுக்கு 220,000 இற்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.

அதில் குறிப்பாக 1/3 மரணங்கள் தென்னாசியாவிலேயே பதிவாவதாகவும் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்