'ஐடா' புயல் 45 பேர் பலி
அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய 'ஐடா' புயலுக்கு 45 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடகிழக்கு கடல் பகுதியில் உருவான ஐடா புயல், சமீபத்தில் மேரிலாண்டு முதல் மாசாசூசெட்ஸ் மாகாணம்வரையில் உள்ள பல நகரங்களை கடுமையாக தாக்கியது. மணிக்கு 241 கி.மீ., வேகத்தில் வீசிய புயல் மற்றும் மழை, வெள்ளத்தில் சிக்கி 45 பேர் பலியானதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இடைவிடாது பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.
நியூயார்க்கில்பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்ததால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. ஏராளமான வீடுகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றுள் வெள்ளம் புகுந்தது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் தளம் வரை வெள்ளம் புகுந்ததை அடுத்து அங்கிருந்தவர்கள் மேல் தளத்திற்கு சென்றனர். நியூஜெர்சி, பென்சில்வேனியா, ரோடி ஐலண்ட் உள்ளிட்ட பகுதிகளில் 23 செ.மீ., மழை பெய்துள்ளதள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.