ETR.FM

21 ஆண்டுக்குப் பின் இந்திய அழகி அர்னாஸ் கவுர் சாந்து வெற்றி

13.12.2021 08:30 1 நிமிட வாசிப்பு
21 ஆண்டுக்குப் பின் இந்திய அழகி அர்னாஸ் கவுர் சாந்து வெற்றி

இஸ்ரேலில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில் இந்திய அழகி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக 2000-ல் லாரா தத்தா தேர்வுக்குப்பின்னர் 21 ஆண்டுகள் கழித்து தற்போது இந்திய பெண் இந்த போட்டியில் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் எய்லாட் நகரில் நடந்த விழாவில் பல நாட்டு அழகிகள் பங்கேற்றனர். மிஸ் யுனிவர்ஸ்சாக தேர்வு செய்யப்பட்ட அர்னாஸ் கவுர் சாந்து (21) பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு மெக்ஸிகோவை சேர்ந்த முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ஆண்ட்ரியாமெசா கிரீடத்தை சூட்டினார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்