வரலாறு காணாத அளவில் 16 மில்லியன் பறவைகளைக் கொன்றுள்ள பிரான்ஸ்

04.05.2022 09:23:38

பிரான்சில் நவம்பர் மாதம் முதல், பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவில், 16 மில்லியன் பறவைகள் கொல்லப்பட்டுள்ளதாக வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு முதலே, பல முறை பிரான்சில் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், வாத்துக்கள் அதிகம் வளர்க்கப்படும் நாட்டின் தென்மேற்கு பகுதிதான் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஆண்டு முதன்முறையாக பாதிக்கப்பட்ட பிரான்சின் தெற்குப் பகுதியிலிருந்து காட்டுப்பறவைகள் புலம்பெயர்ந்து வந்துள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு பறவைக்காய்ச்சல் அலை உருவாகி, இப்போதுதான் அது முடிவுக்கு வருகிறது.

பிரான்சில், சுமார் 1,400 இடங்களில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதாக வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், மார்ச் இறுதி வாக்கில் பறவைக்காய்ச்சல் உச்சம் தொட்ட நிலையில், இப்போது தொற்று பரவும் வேகம் குறைந்து வருவதாக வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது .