ETR.FM

யாழில் வாள், கத்தி தேடுவதில் பொலிஸார் தீவிரம்

09.12.2023 09:17 1 நிமிட வாசிப்பு
யாழில் வாள், கத்தி தேடுவதில் பொலிஸார் தீவிரம்

யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடும் விசேட சுற்றிவளைப்புகள் தீவிரமாக நடத்தப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் கூலிக்கு வன்முறையில் ஈடுபடும் கும்பல்களுக்கு இடமளிக்க முடியாது என யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.

யாழில் அண்மைக்காலமாக வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்