நேபாளத்தில் 2 ஹெலிகாப்டர்கள் மோதி கோர விபத்து!

03.11.2026 08:25:48

நேபாளத்தின் எவரெஸ்ட் மலைப் பகுதியில் இன்று (03) இரண்டு தனியார் ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியப் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

 

தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த 47 வயதான இந்தியப் பயணி வசந்த் குமார் பாலராமராமுடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

 

சோலுகும்பு மாவட்டத்தின் பெரிச்சே (Pheriche) ஹெலிபேடில் காலை 8.11 மணியளவில் தரையிறங்க முயன்ற பிஷ்டெயில் ஏர் மற்றும் ஏர் டைனஸ்டி நிறுவனங்களின் ஹெலிகாப்டர்களின் இறக்கைகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இதில் நியூசிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 49 வயதான சைலேஷ் கிருஷ்ணா படேல் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர் விமானிகளும் காயமடைந்தனர். 

 

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

உயிரிழந்தவரின் உடல் லுக்லா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து நேபாள பொலிஸாரும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.