ETR.FM

ஆப்கானிஸ்தானில் விபத்து-21 பேர் உயிரிழப்பு!

18.03.2024 07:00 1 நிமிட வாசிப்பு
ஆப்கானிஸ்தானில் விபத்து-21 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்

ஹெல்மண்ட் மாகாணத்தின் கெராஷ்க் மாவட்டத்தில் இன்று இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள்  தெரிவித்துள்ளன.

விபத்தில் மேலும் 38 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி பயணிகள் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் பவுசருடன் மோதியதில் இந்த  விபத்து சம்பவித்துள்ளது.

இதேவேளை கடந்த 10 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 1,600 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 4,000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்