ETR.FM

கிழக்கு முதல்வர் வேட்பாளராக சாணக்கியன்! - சிறிதரன் யோசனை.

28.02.2021 10:59 1 நிமிட வாசிப்பு
கிழக்கு முதல்வர் வேட்பாளராக சாணக்கியன்! - சிறிதரன் யோசனை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்வைத்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கிழக்கு முதல்வர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமாகாணசபை தேர்தலில் மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டும். கடந்த மாகாணசபை தேர்தலில் அவர் தனது இடத்தை விக்னேஸ்வரனிற்கு விட்டுக் கொடுத்தார். இம்முறை அப்படியான முடிவை எடுக்கக்கூடாது. அவரது தலைமையில் இளைஞர்களை களமிறக்க வேண்டும்.

அத்துடன், கிழக்கு மாகாணசபை தேர்தலில் இரா.சாணக்கியனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் எனவும் யோசனை ஒன்றினை சிறிதரன் முன்வைத்துள்ளார். முஸ்லிம் மக்கள் அவரை ஆதரிப்பார்கள் என்பதால், அவரை களமிறக்கி வெற்றியடையலாமென சிறிதரன் குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்