பிரேசில் ஜனாதிபதி அவசரமாக மருத்துவமனையில் அனுமதி!
04.01.2022 12:01:29
பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, குடல் அடைப்பு காரணமாக இன்று அதிகாலை அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2019 முதல் ஆட்சியில் இருக்கும் போல்சனாரோ, சாவ் பாலோவில் உள்ள விலா நோவா ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக டிவி குளோபோ மற்றும் பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.